வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
10வது லண்டன் நேஷனல் பிலிம் அகாடமி திரைப்பட விழா நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவில் திரையிடப்பட்ட கேப்டன் மில்லர் படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை பெற்றுள்ளது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார், தனுஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சத்யஜோதி தியாகராஜன் தயாரித்திருந்தார்.
விருது பெற்றது குறித்து தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கேப்டன் மில்லர் திரைப்படம், 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்' என்ற பிரிவின் கீழ் விருது பெற்றுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில் உலகின் பல சிறந்த வெளிநாட்டுப் படங்களுடன் இணைந்து பரிந்துரைக்கப்பட்டது, எனினும் அனைத்துப் படங்களையும் தாண்டி, லண்டனில் உள்ள போர்செஸ்டர் ஹாலில் நடந்த மதிப்புமிக்க 10 வது லண்டன் நேஷனல் பில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளின் போது, சத்யஜோதி பிலிம்ஸின் 'கேப்டன் மில்லர்' சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருது பெற்றுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.