ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது தான் இயக்கி உள்ள டீன்ஸ் படத்தை வருகிற ஜூலை பன்னிரண்டாம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார் . ஆனால் இந்த நேரத்தில் அவர், டீன்ஸ் படத்தின் கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக பணியாற்றிய சிவப்பிரசாத் என்பவர் மீது கோவை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரில், டீன்ஸ் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் முடித்து தருவதாக என்னிடம் ஒப்பந்தம் போட்ட சிவப்பிரசாத் 68.54 லட்சம் ரூபாய் கேட்டார். தான் 42 லட்சம் முதல்கட்டமாக செலுத்தி விட்டேன், ஆனபோதிலும் இன்னும் தனது படத்தின் கிராபிக்ஸ் பணிகளை அவர் முடித்து தரவில்லை. ஏப்ரல் வரை பணிகளை முடிக்க காலநீட்டிப்பு செய்தும் அவர் முடிக்கவில்லை. மாறாக இன்னும் கூடுதலாக பணம் கேட்கிறார் என்று அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து சிவப்பிரசாத் இடத்தில் கோவை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் மீது வழக்கும் பதிவாகி உள்ளது.
சிவபிரசாத் மறுப்பு
பணிகளை முழுமையாக முடித்துவிட்டோம். அதன்பிறகே பணம் கேட்டோம். ஆனால் பணிகளை முடிக்கவில்லை என பொய் புகார் அளித்துள்ளார் பார்த்திபன். சட்டத்தை நம்புகிறோம் என தெரிவித்துள்ளார் சிவபிரசாத்.
இதே ஜூலை 12ஆம் தேதிதான் இந்தியன்-2 படமும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.