அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
2024ம் ஆண்டின் அரையாண்டு நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்த ஆறு மாத காலத்தில் ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்களாவது வெளிவந்து கொண்டிருந்தது. இதுவரையில் சுமார் 115 படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த 2023ம் ஆண்டின் அரையாண்டுடன் ஒப்பிடும் போது இது அதிகம்.
இந்த 2024ம் ஆண்டில் இந்த வாரம், அதாவது நேற்றைய வெள்ளிக்கிழமை நாளான ஜூன் 28ம் தேதி ஒரு புதிய தமிழ் படம் கூட வெளியாகாதது ஆச்சரியமான ஒன்று. நேற்று முன்தினம் தெலுங்கு டப்பிங் படமான 'கல்கி 2898 எடி' படம் வெளிவந்தது. அந்தப் படம் அதிக தியேட்டர்களில் வெளியானதும் ஒரு காரணம்.
அடுத்து வர உள்ள ஆறு மாதங்களில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. அதனால், முடியப் போகும் இந்த அரையாண்டு காலத்தில் வெளிவந்ததைப் போல நிறைய படங்கள் வெளிவர வாய்ப்பில்லை. கிடைக்கும் இடைவெளியில்தான் மற்ற சிறிய படங்கள் வந்தாக வேண்டும்.
சிறிய படங்களுக்கான ஒரு 'விண்டோ'வை எந்த ஒரு தயாரிப்பாளர் சங்கமும் இதுவரை உருவாக்கவில்லை. அதைப் பற்றி அவர்கள் கவலைப்படவும் இல்லை. இந்த நிலை நீடித்தால் எதிர் வரும் காலங்களில் சிறிய பட்ஜெட் படங்கள் என்பதே இல்லாமல் போகவும் வாய்ப்புள்ளது.