வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
சினிமா விழா என்றாலே நடிகர்களின் பவுன்சர்கள் பத்திரிகையாளர்களையும், ரசிகர்களையும் தடுப்பதையும் சமயங்களில் தாக்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
நேற்று நடந்த விஜய் நிகழ்ச்சியில் துபாயில் இருந்து வந்த சிறப்பு பவுன்சர்கள், மற்றும் உள்ளூர் பவுன்சர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக காவல் துறையினர் நிகழ்ச்சி நடந்த மண்டபத்திற்கு வெளியில் இருந்தனர்.
நேற்று இரவு விஜய்யின் ரசிகர்கள் இருவர் விஜய்யை தூரத்திலிருந்தாவது பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நீண்ட நேரமாகக் காத்திருந்துள்ளனர். அவர்களிடம் சென்ற உள்ளூர் பவுன்சர் ஒருவர் அவர்களை மரியாதைக் குறைவாகப் பேசி அங்கிருந்து விரட்ட முயற்சித்துள்ளார். அதை சில டிவி செய்தியாளர்கள் வீடியோ எடுத்துள்ளனர். உடனே, அந்த செய்தியாளர்களை நோக்கி அந்த பவுன்சர் பாய்ந்துள்ளார்.
பின்னர் டிவி செய்தியாளர்கள் அனைவரும் அந்த பவுன்சர் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என மண்டபத்தின் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். பின்னர் திருவான்மியூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் தவெக நிர்வாகிகள் சிலர் செய்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதன்பின்பு ரசிகர்களையும், செய்தியாளர்களையும் அடிக்கப் பாய்ந்த அந்த பவுன்சர் வந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
விஜய் தற்போது தனக்கென பாதுகாப்பு பணியில் ஈடுபட சில சிறப்பு பவுன்சர்களை வேலைக்கு சேர்த்துள்ளாராம். அந்த பவுன்சர்களை மீறி விஜய்யை இனி எந்த ஒரு ரசிகரும் நெருங்க முடியாது என்பது கூடுதல் தகவல்.