குட் பேட் அக்லி டிரைலர் இன்று வெளியாகிறது | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
தமிழ் நடிகரான விஜய் சேதுபதி, ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படத்தில் வில்லனாகவும், அதற்குப் பிறகு 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற ஹிந்திப் படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார்.
தமிழில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த விஜய் சேதுபதிக்கு, சமீபத்தில் வெளியான 'மகாராஜா' படம் பெரும் வெற்றியை அவருக்குப் பெற்றுத் தந்தது. இப்படத்தை அடுத்து 'ஏஸ், டிரைன்' ஆகிய படங்கள் அவர் நடிப்பில் வெளியாக உள்ளன.
தமிழில் தொடர்ந்து வெற்றி பெறாமல் போனதற்கு மற்ற மொழிகளிலும் நடித்ததுதான் காரணம் என நினைத்த விஜய் சேதுபதி, இனி மற்ற மொழிகளில் நடிப்பதைத் தவிர்க்க முடிவெடுத்தார். இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா சமீபத்தில் விஜய் சேதுபதியை சென்னைக்கு வந்து சந்தித்துப் பேசினார். அப்போதே இருவரும் இணைந்து படம் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் வெளியானது.
இப்போது அது உறுதி செய்யப்பட்டுவிட்டதாம். ஹிந்தியில் தயாராக உள்ள அந்தப் படத்தில் நானா படேகர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும் என்கிறார்கள்.