Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நாய்களுக்கு 45 கோடி ஒதுக்கிய மிதுன் சக்ரவர்த்தி

25 ஜூன், 2024 - 01:55 IST
எழுத்தின் அளவு:
Mithun-Chakraborty-allocated-45-crores-for-dogs

பொதுவாக நடிகர்கள் கார் மீதும், நடிகைகள் வளர்ப்பு பிராணிகள் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். விதிவிலக்காக சில நடிகைகள் கார் மீது ஆர்வமாக இருப்பார்கள். நடிகர்களில் வளர்ப்பு பிராணிகள் மீது ஆர்வமாக இருப்பவர்களில் முக்கியமானவர் மிதுன் சக்ரவர்த்தி.80 மற்றும் 90களில் டாப்பில் இருந்த அவர் இப்போது ஓய்வெடுத்து வருகிறார்.

நாய்கள் மீது ஆர்வம் கொண்ட மிதுன் சக்ரவர்த்தி 116 நாய்களை மும்பை அருகே உள்ள மட் தீவில் தனக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தில் வளர்த்து வருகிறார். அவர், நாய்களின் பராமரிப்புக்காக 45 கோடி ஒதுக்கி உள்ளார். இந்த வைப்புத் தொகை பணத்தில் இருந்து நாய்களை பராமரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அதோடு நாய்களுக்கு விளையாட்டு மைதானம், உணவு, சுகாதாரம், மருத்துவ வசதி போன்ற அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார். பாதுகாப்புக்கு பணியாளர்களையும் நியமித்து உள்ளார். இந்த தகவலை மிதுன் சக்கரவர்த்தியின் மருமகளான நடிகை மதால்சா ஷர்மா வெளியிட்டுள்ளார்.

116 நாய்களில் 50 சதவிகிதம் சாலையில் பாராமரிப்பின்றி கிடந்த நாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாய்கள் மட்டுமின்றி இனி தத்தெடுக்கப்படும் நாய்களுக்கும் உரிய ஏற்பாடுகளை மிதுன் செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
செவி திறனை இழந்த பாடகிசெவி திறனை இழந்த பாடகி கங்கனாவின் எமர்ஜென்சி செப்., 6ல் ரிலீஸ் கங்கனாவின் எமர்ஜென்சி செப்., 6ல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

இளந்திரையன் வேலந்தாவளம் தனது இளமைக் காலத்தில் கஷ்ட பட்டவர்... பின்னர் disco dancer போன்ற படங்களில் நடித்து உலக புகழ் பெற்றார்....அவருக்குள் இப்படி ஒரு கருணை கடலா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in