வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் தமிழில் வாத்தி படத்தில் நடித்தார். தொடர்ந்து தெலுங்கிலும் நடிக்கிறார். மலையாள சினிமாவில் சமீபத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது. இதைத்தொடர்ந்து மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாக பல திரைப்பிரபலங்களும் பேசி வருகின்றனர். இதில் சில முன்னணி நடிகர்களின் பெயர்களும் உள்ளன. அவர்கள் மீது வழக்கும் பதிவாகி உள்ளது.
ஹேமா கமிட்டி போன்று மற்ற திரையுலகிலும் இதுபோன்று கமிட்டி அமைக்க வேண்டும் என்ற குரல்கள் எழ துவங்கி உள்ளன. இந்நிலையில் ஹேமா கமிட்டி பற்றி சம்யுக்தா கூறுகையில், ‛‛காட்டில் மாட்டிக் கொண்டு வழிதேடும் விதமாக தான் இன்றைய சினிமா உள்ளது. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி சிலர் சுரண்டல்களில் ஈடுபடுகின்றனர். சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும். அதற்கு ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவில் ஒரு கேம் சேஞ்சராக மாறும்'' என்கிறார்.