வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
இந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் கடந்த சில வருடங்களாக தெலுங்குத் திரைப்படங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் அதிக வசூலை அள்ளிக் குவித்து வருகின்றன. இந்த ஆண்டில் 'கல்கி 2898 ஏடி' படம் 1000 கோடி வசூலைக் கடந்த படமாக அமைந்தது. அடுத்து 1000 கோடி வசூல் படமாக அடுத்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ள 'தேவரா 1' படம் அமையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஆந்திர மாநில அரசு அப்படத்திற்காக அனுமதித்துள்ள 6 காட்சிகள், டிக்கெட் கட்டண உயர்வு ஆகியவற்றால் அது சாத்தியமாகும் என தாராளமாகச் சொல்லலாம். ஆந்திர வரலாற்றிலேயே படம் வெளியாகும் தினத்தில் 6 காட்சிகளுக்கு அனுமதி அளிப்பது பல வருடங்களுக்குப் பிறகு நடந்திருக்கிறது என்கிறார்கள்.
படம் வெளியாகும் செப்டம்பர் 27ம் தேதியன்று நள்ளிளிரவு 12 மணியிலிருந்து 6 காட்சிகளும், அதற்குப் பிறகு அடுத்த 9 நாட்களுக்கு மட்டும் தினமும் 5 காட்சிகளும் திரையிட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டிக்கெட் கட்டணங்களில் குறைந்த வகுப்புக் கட்டணங்களில் ரூ.60, உயர்ந்த வகுப்புக் கட்டணங்களில் ரூ.110, மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூ.135 கூடுதலாக உயர்த்திக் கொள்ளவும் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில அரசு பிறப்பித்துள்ள இந்த அரசு ஆணைக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ஜுனியர் என்டிஆர். இவரும் சந்திரபாபு நாயுடுவும் உறவினர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.