ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் கடவுள் முருகனின் வரலாற்றை சொல்லும் ஸ்ரீவள்ளி, கந்தன் கருணை மாதிரியான புராண படங்கள் ஒரு காலத்தில் வெளிவந்தது. அதன் பிறகு முருகனின் பெருமைகளை பேசும் 'வருவான் வடிவேலன்' மாதிரியான சமூக படங்கள் வந்தது. சின்னத்திரையில் புராண மற்றும் பக்தி தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கியதும் பக்தி படங்கள் வருவது நின்று போனது.
இந்த நிலையில பல ஆண்டுகளுக்கு பிறகு 5 முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாராகும் ஒரு படத்தை ஜெயம் எஸ்.கே.கோபி தயாரிக்கிறார்.
இவர் தீவிர அரசியல்வாதியாக இருந்து பின்னர் ஆன்மிக ஈடுபாடு கொண்டு முருக பக்தர் ஆனவர். முருக கடவுளின் பெயரில் காது கேளாத, வாய் பேசாத, கண் தெரியாத மற்றும் ஆட்டிசம் உள்ள குழந்தைகளை 'தெய்வக் குழந்தைகள்' என்று அழைத்து அவர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார்.
“நீண்ட நாட்களுக்கு பிறகு முருகர் குறித்த ஒரு திரைப்படத்தை தயாரிக் உள்ளேன். இதற்காக பல முருக பக்தர்களை சந்தித்து அவர்கள் வாழ்க்கையில் முருகன் கொடுத்த அற்புதங்களை சேகரித்து அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் முருக பக்தி குறித்த விழிப்புணர்வை இன்றைய தலைமுறையினர் இடம் பெரிய அளவில் எடுத்துச் செல்லும்” என்கிறார் கோபி.