டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

குட்நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரிக்கும் 3வது படத்தில் நாயகனாக நடிக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.
இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'புரொடக்ஷன் நம்பர் 3' என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' படம் வெற்றி அடைந்தது. அதன்பிறகு பாலாஜி நடித்த வீட்ல விஷேசம், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் படம் சுமாரன வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும், படத்திற்கு 'மாசானி அம்மன்' என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும், இதில் மாசானி அம்மனாக த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது காமெடி ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாக இருக்கிறது. படத்தின் இயக்குனர் யார் என்பதை கூட இந்த அறிவிப்பில் வெளியிடப்படவில்லை. 'குட்நைட்' படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரன் இயக்கலாம் என்று தெரிகிறது.




