எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் |
தமிழ் சினிமாவின் சாதனை இயக்குனர் ராம.நாராயணன். 126 படங்களை இயக்கி சாதனை படைத்த இவர் காரைக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்ததே கண்ணதாசன் போன்று பாடலாசிரியராக வேண்டும் என்பதற்காக. அவரது வாழ்க்கை நீண்ட பயணம். இன்று அவரது 10 ஆண்டு நினைவு தினம். அவரைப் பற்றி ஒரு சிறிய நினைவு...
1949ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி காரைக்குடியை சேர்ந்த வியாபாரி ராமசாமி - மீனாட்சி ஆச்சி தம்பதிக்கு மகனாக 1949ம் ஆண்டு பிறந்தார். சிறுவயது முதலே எழுத்தின் மீதும், சினிமாவின் மீதும் ஆர்வம் கொண்ட ராம நாராயணன் பாடலாசிரியராக வேண்டும் என்ற ஆசையில் 1976ல் சென்னை வந்தார்.
அப்போது சினிமாவில் மசாலா பட இயக்குனராக இருந்த கடையநல்லூர் காஜா இயக்கிய படங்களுக்கு வசனம் எழுதினார். அதன்பிறகு 'சுமை' என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். முதல் படத்திலேயே விருதுகளையும், பாராட்டுகளையும் குவித்தார். அதை தொடர்ந்து சிவப்புமல்லி, மனைவி சொல்லே மந்திரம், கூட்டுபுழுக்கள் போன்ற பல சமூக படங்களை இயக்கினார்.
ஒரு கட்டத்தில் அவரும் மசாலா படங்களுக்கு மாறினார். சூரக்கோட்டை சிங்ககுட்டி இளஞ்ஜோடிகள் என பல படங்களை இயக்கினார். அதன் பிறகு அதன்பிறகு யானை, பாம்பு, குரங்கு போன்ற விலங்குளை வைத்து ஆடி வெள்ளி, துர்கா போன்ற படங்களை இயக்கினார். பின்னர் பக்தி படங்களுக்கு தாவினார். 'ராஜ காளியம்மன்', 'அன்னை காளிகாம்பாள்', 'பாளையத்தம்மன்', 'மாயா', 'கோட்டை மாரியம்மன்' போன்றவை அதில் முக்கியமான படங்கள்.
இப்படியாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலாய் உள்பட பல்வேறு மொழிகளில் 126க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி சாதனை புரிந்துள்ளார். உலக அளவில் அதிக படங்களை இயக்கியவர்கள் என்ற பட்டியலில் ராமநராயணன் இணைந்தார். பெரும்பாலும் தனது படங்களை தானே தயாரித்தார். அரசியலில் புகுந்து சட்டசபை உறுப்பினார், இயல் இசை நாடக மன்றத் தலைவர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என பல பொறுப்புகளை வகித்தார். உடல்நலக்குறைவால் கடந்த 2014 ஜூன் 22ம் தேதி தன்னுடைய 65வது வயதில் காலமானார். தற்போது அவரது மகன் முரளி ராமசாமி தந்தை வழியில் தயாரிப்பாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பயணம் செய்து வருகிறார்.