ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்து, வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சூரரைப்போற்று' . கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் தற்போது ஹிந்தியில் 'சர்பிரா' என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர் . இதில் கதாநாயகனாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடித்துள்ளார். ஜி. வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுதாவே இயக்கி உள்ளார்.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும், அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் வருகின்ற ஜூலை 12ம் தேதி அன்று திரைக்கு வருவது முன்னிட்டு இன்று இதன் டிரைலர் யூடியூபில் வெளியானது. ஏற்கனவே இதில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என கூறப்பட்டு வந்தது. தொடர்ந்து தற்போது வெளிவந்துள்ள இந்த டிரைலரில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் தோன்றினார். அவர் எந்த மாதிரியான ரோலில் நடித்துள்ளார் என ரசிகர்கள் ஆர்வமாய் உள்ளனர்.