டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

விஜய் நடிப்பில் வெளியான 'பைரவா' படத்தின் மூலம் சிறிய கேரக்டரில் அறிமுகமானவர் அம்மு அபிராமி. அதன்பிறகு 'தீரன் அதிகாரம் ஒன்று', 'ராட்சசன்' படத்தில் நடித்தார். 'அசுரன்' படத்தில் தனுஷின் முன்னாள் காதலியாக மாரியம்மா கதாபாத்திரத்தில் பிளாஷ்பேக் போர்ஷனில் நடித்திருந்தார். இவை தவிர துப்பாக்கி முனை, தம்பி, காரி, பாபா பிளாக்ஷிப், கண்ணகி, ஹாட் ஸ்பாட் படங்களில் நடித்தார்.
இதுதவிர சின்னத்திரையில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திபன் மணியை காதலிப்பதாக தவல்கள் வெளியானது. ஆனால் இதனை இருவரும் மறுக்காமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் பார்த்திபன் மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி காதலை உறுதி செய்துள்ளார் அம்மு அபிராமி. மணியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு “பிறந்ததற்கு நன்றி, வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி” பதிவிட்டுள்ளார்.




