ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் 'குட் பேட் அக்லி' என்கிற படத்தில் நடித்து வருகின்றார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரத்தில் ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த முதற்கட்ட படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் மற்றும் ஒரு பாடல் காட்சியையும் படமாக்கியுள்ளனர்.
இந்நிலையில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர். இந்த இடைப்பட்ட இடைவெளியில் தான் ஏற்கனவே மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்து வந்த விடாமுயற்சி படத்தில் கலந்து கொள்ள உள்ளார் அஜித்.