லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சமீபத்தில் விஜய் நடித்த 'கில்லி' படம் ரீ ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றது. 30 கோடி வரை வசூலித்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படங்களை மீண்டும் வெளியிட பலரும் முயற்சித்து வருகிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறது 'துப்பாக்கி'. இந்த படத்தை வருகிற 21ம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். கடந்த 2012ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். விஜய்யுடன் காஜல் அகர்வால், சத்யன், வித்யூத் ஜமால், ஜெயராம் உள்பட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். எஸ்.தாணு தயாரித்திருந்தார்.