லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி |

தமிழ் சினிமாவில் டாப் வசூல் நடிகர்களில் ரஜினிகாந்த், விஜய், அஜித், கமல்ஹாசன் என்ற வரிசைதான் இருக்கிறது. மற்றவர்கள் அதற்குப் பிறகே. விஜய் அடுத்து நடிக்க உள்ள படத்துடன் சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். அதனால், அவருடைய இடத்திற்கு யார் வருவார்கள் என்பது குறித்து அவரது 'சினிமா ரிட்டயர்மென்ட்' அறிவிப்புக்குப் பிறகே ஆரம்பமாகிவிட்டது.
விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படத்தின் கிளைமாக்சில் விஜய் அவரிடமிருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்து 'துப்பாக்கிய புடிங்க சிவா' என்று வசனம் பேசியிருப்பார். விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன்தான் என விஜய்யே முடிவு செய்துவிட்டார் என படம் வெளிவந்த போது பரபரப்பாகப் பேசினார்கள். அதனால், மற்ற நடிகர்களின் ரசிகர்களும் இது பற்றி நிறையவே கமெண்ட் செய்தார்கள்.
ஆனால், சிவகார்த்திகேயன் நடித்து நேற்று முன்தினம் வெளிவந்த 'அமரன்' படத்தின் முதல் நாள் வசூலே 42 கோடி என வந்தது. நேற்றைய வசூல் நிச்சயம் 50 கோடி வந்திருக்கலாம் என்று தகவல். இன்றைய வசூல், நாளைய வசூல் ஆகியவை சேர்த்தால் 200 கோடியை நான்கே நாட்களில் நெருங்கும் வாய்ப்புள்ளது.
இதனால், விஜய் ரசிகர்கள் பலரும் விஜய்யிடமிருந்து சிவகார்த்திகேயன் துப்பாக்கியை வாங்கிய அதிர்ஷ்டம் 'அமரன்' படம் அமோகமாக வசூலிக்கிறது என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். ராணுவ அதிகாரியாக, விஜய் துப்பாக்கியைத் தூக்கி சண்டை போட்ட 'துப்பாக்கி' படம் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்து முதல் 100 கோடியை வசூலித்துத் தந்தது. அது போலவே 'அமரன்' படத்திலும் சிவா, ராணுவ அதிகாரியாக நடித்து துப்பாக்கியைத் தூக்கி சண்டை போட்டுள்ளார் என இரண்டு படத்துக்கும் 'கனெக்ட்' செய்து பேசி வருகிறார்கள்.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….'துப்பாக்கி' படத்தை விடவும் 'அமரன்' வசூல் போகப் போக அதிகமாக வரும் என்பதே பாக்ஸ் ஆபீஸ் தகவல்.