அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தற்போது நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் மாண்டி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டார். அதில் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்யா சிங்கை வீழ்த்தி, 52.9 சதவீத ஓட்டுகளுடன் முதல் தேர்தலிலேயே வெற்றிப் பெற்று எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், டில்லிக்கு செல்வதற்காக சண்டிகர் விமான நிலையம் வந்த கங்கனா ரணாவத்தை, விமான நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் திடீரென கன்னத்தில் அறைந்தார். விவசாயிகள் குறித்து கங்கனா ஏதோ கருத்து தெரிவித்ததாகவும், இதனால் பெண் காவலாளி கோபமடைந்து கங்கனா கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து கங்கனா ரணாவத் புகார் அளித்துள்ளதோடு, சிஐஎஸ்எப் பெண் காவலரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். கங்கனாவை அறைந்தவரின் பெயர் குல்விந்தர் கவுர் என்று கூறப்படுகிறது. அவரை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். எம்.பி.,யாக வெற்றி பெற்றுள்ள கங்கனா ரணாவத்தை அறைந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.