இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழில் 'தாம்தூம், தலைவி, சந்திரமுகி - 2' போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். இவர் ஹிந்தியில் 'எமர்ஜென்சி' என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான இப்படம், இந்திராவின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சியை மையக்கதையாக கொண்டிருந்தது.
ஜன.,17ம் தேதி ரிலீசான இப்படம் வசூலில் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது. தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், 'எமர்ஜென்சி படத்தை இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப வேண்டும்' எனக் கோரிக்கை வைத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதை கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ''அமெரிக்கா தனது உண்மையான முகத்தை காட்ட விரும்பவில்லை. வளர்ந்து வரும் நாடுகளை எப்படி மிரட்டி, ஒடுக்கி, வளைக்கிறார்கள் என்பதை எமர்ஜென்சி படம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதனால், அவர்களின் முட்டாள்தனமான ஆஸ்கர் விருது அவர்களிடமே இருக்கட்டும். எங்களுக்கு தேசிய விருது உள்ளது'' என்று பதிலுக்கு பதிவிட்டிருந்தார்.
இந்திய படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைப்பது அரிதான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்திய படங்களுக்கு அங்கு பாகுபாடு காட்டப்படுவதாக நீண்ட காலமாக பேச்சு நிலவிய நிலையில், 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 'ஆர்ஆர்ஆர்' படத்திற்காக இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்டோர் ஆஸ்கர் வென்றிருந்தனர். ஆனால், கங்கனா, தனது படத்திற்கு தேசிய அங்கீகாரம் கிடைத்தாலே போதும் என்ற ரீதியில் பதிவிட்டிருப்பது, மீண்டும் விவாதப்பொருளாகியுள்ளது.