காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் |
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் இளமைக்காலம் மற்றும் முதுமை காலம் என இரண்டு விதமான கெட்டப்பில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்நிலையில் ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள கோஸ்டி என்ற படம் வருகிற 17ம் தேதி திரைக்கு வரவுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கவுதம் கிச்சலும் என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வாலுக்கு தற்போது நீல் என்ற மகன் இருக்கிறார். அவ்வப்போது தனது மகனுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை, சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார் காஜல்.
இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், என் மகனை அவனது 8 வயது வரை திரைப்படங்கள் பார்ப்பதையோ அல்லது ஸ்மார்ட் போன் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதை அனுமதிக்கப் போவதில்லை. அவனது 8 வயதுக்கு பிறகு தான் திரைப்படங்கள் பார்ப்பதற்கு அனுமதிப்பேன். அப்போது என் மகனுக்கு நான் காண்பிக்கும் முதல் படம் விஜய் உடன் இணைந்து நான் நடித்த துப்பாக்கி படமாகத்தான் இருக்கும். இந்த படம் என் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை கொடுத்த படம். எனக்கு அதிகம் பிடித்தமான படம் என்று கூறியுள்ளார் காஜல்.
2012ம் ஆண்டு வெளியான துப்பாக்கி படத்தை பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு ரகசிய பணியை கையாளும் ராணுவ வீரரின் கதையை மையப்படுத்தி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.