நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது 171வது படமாக 'கூலி' என்கிற படத்தில் நடிக்கின்றார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இதில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அபிராமி உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் விருமாண்டி, வானவில், மிடில் க்ளாஸ் மாதவன் ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 10ம் தேதி அன்று துவங்குகிறது.