Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஓடிடிக்கள் மறுப்பு ; நேரடியாக யூடியூப்பில் வெளியான பஹத் பாசில் படம்

06 ஜூன், 2024 - 10:41 IST
எழுத்தின் அளவு:
Refusal-of-OTTs;-Bahad-Basil-movie-released-directly-on-YouTube


நடிகர் பஹத் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆவேசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தியேட்டர்களில் நன்கு ஓடிக்கொண்டிருக்கும்போதே ஓடிடி தளத்திலும் வெளியாகி அங்கேயும் வரவேற்பை பெற்றது. பொதுவாகவே பஹத் பாசிலின் படங்களுக்கு ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்றாலும் கடந்த வருடம் அவர் நடித்த ‛தூமம்' என்கிற படத்தை சில காரணங்களால் இதுவரை எந்த ஓடிடி தளமும் வாங்கவில்லை.

படம் வெளியாகி 11 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது வேறு வழியின்றி நேரடியாக யூடியூப்பில் இந்த படத்தை வெளியிட்டுள்ளனர். கன்னடத்தில் லூசியா மற்றும் யு டர்ன் என வியக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் பவன்குமார் முதல் முறையாக மலையாளத்தில் நுழைந்து இயக்கிய இந்த படம் அவருக்கும் பஹத் பாசிலுக்கும் வெற்றியை தர தவறியது. அதனாலயே இந்த படத்தை வாங்குவதற்கு ஓடிடி நிறுவனங்கள் தவிர்த்தன என்றும் சொல்லப்படுகின்றது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நட்சத்திர வாரிசுகளை தேடிச்செல்லும் ‛கல்கி' புஜ்ஜி கிப்ட்நட்சத்திர வாரிசுகளை தேடிச்செல்லும் ... தேர்தலில் வெற்றி பெற்ற சுரேஷ்கோபிக்கு மம்முட்டி அறிவித்த பரிசு தேர்தலில் வெற்றி பெற்ற ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)