டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழில் விஜயகாந்த் நடித்த 'அரசாங்கம்' படத்தில் அறிமுகமானவர் நவ்நீத் ராணா. அதன்பின் கருணாஸ் ஜோடியாக 'அம்பாசமுத்திரம் அம்பானி' படத்திலும் நடித்தார். தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோற்றார். 2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த மார்ச் மாதம் பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு அதே அமராவதி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, “நீங்கள் காங்கிரசுக்கு ஓட்டளித்தால், பாகிஸ்தானுக்கு ஓட்டளித்தது போல,” என்று பேசினார். அது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த முறை சுயேச்சையாக வெற்றி பெற்ற தொகுதியில் இந்த முறை அவர் தோற்றுப் போனார். காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார்19 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.




