ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் |
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரம்பா தெலுங்கு படங்களில் அறிமுகமானார். பின்னர் 1993ல் பிரபு நடித்த 'உழவன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இரண்டாவது படமாக உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் அவர் தொடை அழகு காட்டி நடித்ததால் 'தொடை அழகி' ஆனார். அந்த படத்தில் இடம்பெற்ற 'அழகிய லைலா...' என்ற பாடலில் ஹாலிவுட் நடிகை மர்லின் மன்ரோ ஸ்டைலில் அழகு காட்டி நடித்தார். அந்த ஒரு காட்சிக்காக அந்த பாடல் ஹிட்டானது.
இந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்களில் ஒரு காட்சியிலாவது தொடை அழகை காட்டுவார். அல்லது இயக்குனர்களே காட்ட வைப்பார்கள். சினிமாவில் புன்னகை அழகி, முகத்தழகி என பல நடிகைகள் இருந்தார்கள். முதலும் கடைசியுமான தொடை அழகி ரம்பா தான்.
தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் 100 படங்களில் நடித்துள்ளார். 'மானாட மயிலாட' நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார். ரம்பா அவருடைய சகோதரர் வாசுவுடன் இணைந்து 'த்ரீ ரோசஸ்' என்ற தமிழ்த் படத்தைத் தயாரித்தார். இந்திரக்குமார் என்கிற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லான்யா, சாஷா, சிவின் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.
ரம்யாவுக்கு இன்று 47வது பிறந்த நாள்.