ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பெங்களூருவில் கடந்த மாதம் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டது. தெலுங்கு சினிமா பிரபலங்கள் சிலரும் அதில் கலந்து கொண்டனர். காவல்துறையினர் நடத்திய ரத்தப் பரிசோதனையில் பலர் போதை பொருள் உட்கொண்டது தெரிய வந்தது.
அந்த பார்ட்டியில் கலந்து கொண்டு போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஹேமா மீது குற்றம் சாட்டப்பட்டது. முதலில் அவர் அதை மறுத்தார். ஆனால், ரத்த பரிசோதனையில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பெங்களூரு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஜூன் 1ம் தேதியே அவர் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால், ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் விசாரணைக்கு வந்தார். அப்போது அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் பலதரப்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
பின் அவரை மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
நடிகை ஹேமா கைது செய்யப்பட்டுள்ளது தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.