எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் |
ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து கடந்த 2014ல் தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிந்து இன்றுடன் (ஜூன் 2) 10 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த நாள் இன்று விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் தெலுங்கானா மாநிலத்துக்கான ஒரு பாடலை உருவாக்கும் பொறுப்பை ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணியிடம் ஒப்படைத்தார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. ‛ஜெய ஜெய ஹே தெலுங்கானா' என்று துவங்கும் இந்த பாடலை ஆண்டே ஸ்ரீ என்பவர் எழுதியுள்ளார். அதே சமயம் இந்த பாடலுக்கு இசையமைக்க கீரவாணியை ஒப்பந்தம் செய்தது குறித்து தெலுங்கானா சினிமா இசையமைப்பாளர்கள் சங்கம் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் பெல்லப்பள்ளி மோகன் கூறும்போது, “தெலுங்கானா ஆந்தம் என்பது நம்முடைய உரிமை. பல போராட்டங்கள், சண்டைகளுக்கு இடையே இந்த மாநிலத்தை நாம் பெற்றோம். இந்த பயணத்தை நாம் கண்கூடாக பார்த்து வந்திருக்கிறோம். தெலுங்கானாவை சேர்ந்தவர் அல்லாத இசையமைப்பாளரான கீரவாணி இந்த விஷயங்களை புரிந்து கொண்டு இசையமைப்பார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என்று கூறியுள்ளார். இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் இருக்கும் கோவூர் என்கிற கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தெரிகிறது.