லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தெலுங்கில் வெளியாகியுள்ள கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. விஸ்வக் சென் கதாநாயகனாகவும், அஞ்சலி, நேஹா ஷெட்டி ஆகியோர் கதாநாயகிகள் ஆகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்வில் தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வின்போது மேடையில் எதிர்பாராத விதமாக திடீரென நடிகை அஞ்சலியை பாலகிருஷ்ணா பிடித்து தள்ளினார். பாலகிருஷ்ணரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துனர். அதேசமயம் கீழே விழாமல் சுதாரித்துக் கொண்டு நின்ற அஞ்சலி, பாலகிருஷ்ணாவின் செயலுக்கு கோபப்படாமல் சிரித்ததையும் பார்க்க முடிந்தது. இதனால் அஞ்சலியை பாலகிருஷ்ணா அப்படி தள்ளியது ஒரு ஜாலியான விளையாட்டுக்கு தான் என்று பலரும் கூறுகின்றனர்.
அது உண்மைதான் என்பது மெய்ப்பிப்பது போல அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர் தரப்பில் ஆரம்பத்தில் நடிகை நேஹா ஷெட்டியின் பக்கத்தில் சென்று பாலகிருஷ்ணா அமர்ந்தபோது நடிகை அஞ்சலி அவரை தானாகவே அழைத்து தன் பக்கத்தில் அமரச் செய்தார். நீண்ட நேரம் ஜாலியாக சிரித்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அதன்பின் மேடை ஏறிய போது தான் பாலகிருஷ்ணா மீண்டும் கலாட்டா செய்யும் விதமாக அஞ்சலியை தள்ளிய நிகழ்வு ஏற்பட்டது என்றும், பாலகிருஷ்ணா இதை அவர் வேண்டுமென்றே செய்யவில்லை என்பது அஞ்சலிக்கும் நன்றாகவே தெரியும். அதனால் தான் அவர் அந்த அளவிற்கு சிரித்தார் என்றும் ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.
அதேசமயம் இன்னும் சில நெட்டிசன்களோ பாலகிருஷ்ணா அந்த நிகழ்வில் மது அருந்திவிட்டு கலந்து கொண்டதால் தான் அப்படி நடந்துகொண்டார் என்றும் கூறுகின்றனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக பாலகிருஷ்ணாவின் காலடியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலின் அருகிலேயே இன்னொரு சிறிய தண்ணீர் பாட்டில் இருந்ததையும் அதில் மதுபானம் போன்ற கலரில் சிறிதளவு திரவம் இருந்ததையும் படம்பிடித்து காட்டியுள்ளனர். அதனால் அவர் நிகழ்ச்சியின் போதே மது அருந்தியிருக்கலாம் என்றும் கூட பலர் தங்களது இன்னொரு கோணத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.