புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
அஜித் தற்போது நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அதற்காக அவர் அங்கேயே தங்கி தனது பைக்கிலேயே படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்று வருகிறார்.
சிரஞ்சீவி நடித்து வரும் தெலுங்குப் படமான 'விஷ்வாம்பரா' படத்தின் படப்பிடிப்பும் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகிலேயே நடந்து வருகிறது. சிரஞ்சீவி படம் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு திடீரென சென்றார் அஜித். சிரஞ்சீவி மற்றும் படக்குழுவினர் அவரை வரவேற்றனர். சிரஞ்சீவியுடன் சிறிது நேரம் பேசி விட்டு பின் தனது படப்பிடிப்பிற்கு திரும்பினார் அஜித்.
சிரஞ்சீவி நடிக்கும் விஷ்வாம்பரா படத்தின் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார். மல்லிடி வசிஷ்டா இப்படத்தை இயக்கி வருகிறார்.