ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
2024ம் ஆண்டில் கடந்த ஆண்டைப் போல அதிகப் படங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த ஆண்டு ஆரம்பமாகி ஐந்து மாதங்கள் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ள நிலையில் இன்றுடன் வெளியாகும் படங்களுடன் சேர்த்து 100 படங்கள் வெளியாகி இருக்கிறது. ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் நான்கு படங்களாவது வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்த 100 படங்களில் ஒரே ஒரு படம் மட்டுமே 100 கோடி வசூலைக் கடந்துள்ளது அதிர்ச்சியான ஒரு தகவல். 'அரண்மனை 4' படம் மட்டுமே 100 கோடியைத் தாண்டிய ஒரு படம். ஒரு சில படங்கள் 50 கோடி வசூலைக் கடந்தாலும் அவை லாபரகமான படமாக அமையவில்லை.
எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டில் முதல் ஐந்து மாதங்களில் வசூலும், லாபமும் குறைவாகவே வந்துள்ளது. டாப் வசூல் நடிகர்களின் படங்கள் இந்த மாதங்களில் வெளியாகவில்லை. வரும் சில மாதங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்துள்ள படங்கள் வர உள்ளன. அதனால், இந்த வருடத்தின் பிற்பாதி அமோக வசூலைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை திரையுலகினரிடம் உள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டிலும் 250 படங்களும் மேல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.