ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தெலுங்கு சினிமாவில் 2002ம் ஆண்டு ஈஸ்வர் என்ற படத்தில் அறிமுகமானவர் பிரபாஸ். அதன் பிறகு வருஷம், சத்ரபதி, டார்லிங், பில்லா என பல படங்களில் நடித்து வந்தவருக்கு ராஜமவுலியின் பாகுபலி படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பாகுபலி- 2 படத்திற்கு பிறகு சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஸ், சலார் போன்ற படங்களில் நடித்த பிரபாஸ், தற்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள ஒரு பதிவு அவரது ரசிகர் வட்டாரத்தில் பரபரப்பு கூட்டி உள்ளது. அதாவது ஒரு ஸ்பெஷல் நபர் நமது வாழ்க்கையில் நுழையப் போகிறார் காத்திருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இப்படி அவர் ஸ்பெஷல் நபர் என்று குறிப்பிட்டது ஒருவேளை பிரபாஸுக்கு பெண் கிடைத்து விட்டதா? என்று ஒரு தரப்பினரும், ஒருவேளை அடுத்த படத்தை ஸ்பெஷல் நபர்கள் யாரேனும் இயக்கப் போகிறார்களோ? அது குறித்த தகவலை தான் இப்படி கூறியிருக்கிறாரோ என்றும் பிரபாஸ் ரசிகர்கள் பலவிதமான யூகங்களை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.




