ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கமல்ஹாசன் தற்போது 'தக் லைப்' படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக இப்படம் தவிர்த்து கமல்ஹாசனும் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார். குறிப்பாக 'உத்தம வில்லன்' படம் குறித்த விவகாரம் ஒன்று கடந்த சில வாரங்களாக சர்ச்சைக்குள்ளாகி வந்தது. அப்படத்தின் நஷ்டத்திற்காகத் தங்களுக்கு ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாகக் கமல்ஹாசன் கூறியிருந்தார். ஆனால், அதன்படி அவர் நடிக்கவில்லை என 'உத்தம வில்லன்' தயாரிப்பாளர்களான இயக்குனர் லிங்குசாமி, அவரது தம்பி சுபாஷ் சந்திர போஸ் தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளித்து அதற்கான பேச்சுவார்த்தை இன்று(மே 10) நடைபெற்றது.
இந்நிலையில் 'தக் லைப்' படத்தில் சிம்பு நடிக்கக் கூடாதென தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார்.'கொரானோ குமார்' படத்தில் நடித்து முடித்த பிறகே அவர் 'தக்லைப்' படத்தில் நடிக்க வேண்டும் என அவரது புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே 'தக் லைப்' படத்தில் நடிக்கவிருந்த துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் விலகிய நிலையில் தற்போது சிம்பு அதில் புதிதாக சேர்ந்துள்ளார். ஐசரி கணேஷ் புகாரை அடுத்து அதற்கும் சிக்கல் வந்துள்ளது.
கமல்ஹாசனை நோக்கியும், அவரது படத்தை நோக்கியும் அடுத்தடுத்து புகார்கள் வந்துள்ளது திரையுலகில் தற்போதைய பரபரப்புப் பேச்சாக உள்ளது.