மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தொடர்ச்சியாக சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறவர் வெற்றி. தற்போது அவர் நடிக்கும் புதிய படம் 'ஆண்மகன்'. இதில் வெற்றியின் தந்தையாக பிரபு நடிக்கிறார். நாயகியாக கேரளாவை சேர்ந்த கிருஷ்ண பிரியா அறிமுகமாகிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தை இயக்குனர்கள் வசந்த் சாய், நந்தா பெரியசாமி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மகா கந்தன் இயக்குகிறார். கிரசண்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.எம்.சபி மற்றும் பாரூக் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். நவ்பல் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குன் மகா கந்தன் கூறும்போது, ‛‛காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக உருவாகிறது. கிராமத்து தந்தை, மகனுக்கு இடையிலான உறவையும், ஊடலையும் சொல்லும் படம். தந்தையாக பிரபுவும், மகனாக வெற்றியும் நடித்துள்ளனர். சென்னை, ராமநாதபுரம், தூத்துக்குடி, மரக்காணம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது” என்றார்.