ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ஜீவி, ஜீவி 2, மெர்லின் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் அஸ்வினி சந்திரசேகர். தனக்கான ஒரு இடத்தை பிடிக்க தொடர்ந்து போராடுகிறார். இந்த நிலையில் தற்போது அவர் நடித்து வரும் படம் 'கங்கணம்'. இதில் கூத்துப்பட்டறை சவுந்தர் நாயகனாக நடிக்கிறார். இவர்கள் தவிர பிரணா, சிரஞ்சன், சரவணன், சம்பத்ராம், அட்ரஸ் கார்த்திக், 'விஜய் டிவி' ராமர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.ஏ.சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்குச் செல்வா இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் இசையரசன் கூறும்போது “ஊரையே மிரட்டிக் கொண்டிருக்கிற வில்லன், நாயகன் குடும்பத்தில் கொடூரமான சம்பவம் ஒன்றை செய்கிறார். ஒரு போலீஸ் அதிகாரியையும் அவமானப்படுத்தி விடுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தொல்லை கொடுக்கிறார். பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் குழுவாக இணைந்து பழிவாங்கக் கங்கணம் கட்டுகிறார்கள். அதைச் செய்தார்களா? இல்லையா? என்பது கதை. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.




