லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'செம்பி' படத்தை தயாரித்த ஏ.ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'லெவன்'. இயக்குநர் சுந்தர்.சியிடம் 'கலகலப்பு 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் 'ஆக்ஷன்' ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இயக்குகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படத்தில் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். இவர் தற்போது இயக்குநர் ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அபிராமி, ஆடுகளம் நரேன், திலீபன், ரித்விகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையை டி. இமான் அமைக்க, கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் கூறும்போது “ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக 'லெவன்' அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்" என்கிறார்.
இந்த படத்தின் மூலம் முதன்முறையாக இமான் இசையில் மனோ பாடி உள்ளார். மனோ கூறும்போது "இமான் இசையை தொடர்ந்து ரசித்து வருகிறேன். அவர் இசையமைத்துள்ள பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக பாடுவது மிக்க மகிழ்ச்சி. உயிரோட்டமிக்க இந்த பாடல் பெரிதும் வரவேற்கப்படும் என்று நம்புகிறேன்" என்றார்.