எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் |
இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த பாகுபலி படத்தின் 2 பாகமும் வசூலில் சாதனை படைத்தது. வெளிநாட்டு மொழிகளிலும் டப் ஆகி வெளியானது. இந்த படத்தின் 3ம் பாகத்தை முதல் இரண்டு பாகத்தின் முந்தைய கதையாக, அதாவது ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி தேவியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்க இருப்பதாகவும், இதன் கதை தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் ராஜமவுலி 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில 'பாகுபலி' படத்தின் 3ம் பாகத்தை இயக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார் ராஜமவுலி. ஓடிடி தளத்துக்காக 'பாகுபலி : கிரவுன் ஆப் பிளட்' என்ற பெயரில் அனிமேஷன் வெப் தொடர் உருவாகியுள்ளது. வரும் 17ம் தேதி வெளியாக இருக்கும் இதன் அறிவிப்பு நிகழ்ச்சி, ஐதராபாத்தில் நடந்தது.
இதில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜமவுலி பேசியதாவது : பாகுபலியின் உரிமையை உருவாக்கிய நகரம் என்பதால், ஐதராபாத் எனது இதயத்தில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. புதிய அத்தியாயத்தை இங்கு வெளியிடுவது மிகவும் அருமையாக இருக்கிறது. பாகுபலி உலகை விரிவுப்படுத்துவது மட்டுமல்லாமல் உறுதியளிக்கும் கதையையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். மகிழ்மதியின் பழம்பெரும் போர்வீரர்கள் ஒன்றுபடுவதால், அதன் காவியமான அனிமேஷன், உணர்வுப்பூர்வமான ஆழம் மற்றும் சிக்கலான கதாபாத்திரங்கள் மூலம் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கக் காத்திருக்கிறது. என்றார்.
பின்னர் நிருபர்கள் பாகுபலி 3ம் பாகம் குறித்து கேட்டபோது அதற்கு பதிலளித்த ராஜமவுலி “பாகுபலி படத்துக்கு எப்போதும் என் மனதில் இடம் உண்டு. அதன் புரமோஷனுக்கு அதிகம் செலவழித்ததாகச் சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை. மொத்த பணத்தையும் படத்தின் தயாரிப்புக்காகவே செலவழித்தோம். டிஜிட்டல் போஸ்டர் மற்றும் வீடியோக்களை உருவாக்க எங்கள் மூளையை மட்டுமே பயன்படுத்தினோம். கதாபாத்திரங்களையும் மேக்கிங் வீடியோக்களையும் வெளியிட்டோம். அதுவே பெரிய விளம்பரங்களை கொடுத்தன. 'பாகுபலி' 3ம் பாகத்தை 'ஆர்ஆர்ஆர்' படம் முடிந்ததுமே தொடங்கி இருக்க வேண்டும். தள்ளிப் போய் விட்டது. கண்டிப்பாக 'பாகுபலி 3' படம் உருவாகும். பிரபாஸ் உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார்.