விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் |
சமீபத்தில் 2024க்கான இந்திய டி-20 அணியில் இடம் பெறும் 15 வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. இதில் கேரளாவில் இருந்து பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் என்பவர் தேர்வாகியுள்ளார். இவர் ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருபவர். இந்த நிலையில் இவர் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகர் பிஜூமேனன். நேரிலேயே சென்று சஞ்சு சாம்சனை சந்தித்து அவரது கன்னத்தில் முத்தமிட்டு, “எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது நண்பா” என்று தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளார்.
நடிகர் பிஜூமேனனும் கிரிக்கெட்டில் தீவிர ஆர்வம் கொண்டவர்தான். அதுமட்டுமல்ல திருச்சூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனில் பதிவு செய்துள்ள இவர் மெம்பர் ஆகவும் இருக்கிறார். மேலும் பிஜூமேனன் தனது சூப்பர் சீனியர் என சஞ்சு சாம்சனும் பலமுறை தனது பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிஜூமேனன் தவிர டொவினோ தாமஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலரும் சஞ்சு சாம்சனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.