ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். அவர் கடந்த நான்கு வருடங்களாக ஓவியக் கலைஞர் சாந்தனு ஹசரிகா என்பவருடன் மும்பையில் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அவர்கள் இருவரும் சமீபத்தில் பிரிந்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஒருவர் மற்றொருவரை 'அன்பாலோ' செய்த பின்புதான் இது தெரிய வந்துள்ளது.
சாந்தனு ஹசரிகாவைப் பிரிவதற்கு முன்பாக 2019ம் ஆண்டில் லண்டனைச் சேர்ந்த இசைக் கலைஞரான மைக்கேல் கோர்சேல் என்பவரைப் பிரிந்தார் ஸ்ருதிஹாசன். பிரிவதற்கு முன்பாக இருவரும் சில வருடங்கள் காதலித்து வந்தார்கள். சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்விற்குக் கூட மைக்கேலை அழைத்து வந்து அப்பா கமல்ஹாசனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஸ்ருதிஹாசன்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து சாந்தனு ஹசரிகாவுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டாராம் ஸ்ருதிஹாசன். இவர்கள் இருவரது பிரிவுக்கு என்ன காரணம் என பாலிவுட் வட்டாரங்களில் விசாரித்த போது திருமணம் பற்றிய விவகாரமாக இருக்கலாம் என்கிறார்கள். ஸ்ருதிஹாசன் விரைவில் திருமணம் செய்து கொள்ள சாந்தனுவிடம் தெரிவித்தாராம். ஆனால், அதைத் தள்ளிப் போடும் முடிவில் அவர் இருந்ததால் இருவரும் பிரிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.