ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. பின்னர் சங்கத்தில் ஏற்பட்ட குழப்பம், வழக்கு போன்றவற்றால் கட்டட பணிகள் பாதியில் நின்றன. சமீபத்தில் இந்த பணிகள் மீண்டும் துவங்கி உள்ளன. இதற்கு நிதி திரட்டும் பணிகளும் நடக்கின்றன.
நடிகர்கள் கமல், உதயநிதி, விஜய் ஆகியோர் தலா ஒரு கோடி வழங்கினர். சிவகார்த்திகேயன் 50 லட்சம் கொடுத்துள்ளார். இப்போது நடிகரும், சங்கத்தின் முன்னாள் துணை தலைவருமான நெப்போலியன் தன் பங்கிற்கு ரூ.1 கோடி நிதி அளித்துள்ளார். இதற்கான அறிவிப்பை நடிகர் சங்கம் வெளியிட்டுள்ளது.
மேலும் நடிகர் சங்கத்தின் கட்டடம் கட்டும் பணிகளுக்காக பொது மக்களிடமிருந்து நிதி பெறவில்லை. அதுபோன்று தகவல்கள் எதுவும் வந்தால் நம்ப வேண்டாம் என நடிகர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.