தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்த கதாநாயகர்களின் வரிசையில் இடம் பெற்றவர் கவின். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'டாடா' படம் நல்ல விமர்சனத்தையும், குறிப்பிடத்தக்க வரவேற்பையும் பெற்றது.
அவர் தற்போது நடித்து வரும் 'ஸ்டார்' படத்திற்கு வெளியீட்டிற்கு முன்பே ஒரு எதிர்பார்ப்பு கிடைத்தது. சில தினங்களுக்கு முன்பு வெளியான டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மே 10ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கான வியாபாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ஏழு கோடி வரை இப்படத்தின் தமிழக உரிமை விற்கப்பட்டுள்ளதாம். இதுவரையில் 'டாடா' என்ற ஒரே ஒரு ஹிட்டைக் கொடுத்த கவினுக்கு இப்படியான வியாபாரம் ஆச்சரியம் என்கிறார்கள். இளம் இயக்குனர் இளன், யுவனின் இசை ஆகியவையும் இந்தப் படத்தின் வியாபாரத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.