ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் ஆவேசம் என்கிற படம் வெளியானது. காமெடி கேங்ஸ்டர் படமாக உருவான இந்த படத்தில் ரங்கா என்கிற நகைச்சுவை கலந்த தாதா கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடித்திருந்தார். ஏற்கனவே ரோமாஞ்சம் என்கிற ஹிட் படத்தை கொடுத்திருந்த இயக்குனர் ஜித்து மாதவன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களின் வரவேற்பு பெற்று தற்போது 100 கோடி வசூலை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை சமந்தா இந்த படம் பார்த்துவிட்டு இதன் ஹேங் ஓவரிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை என்று ஓரிரு வார்த்தைகளில் பாராட்டு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மீண்டும் இந்த படத்தை குறித்து விரிவான பாராட்டுகளை தெரிவித்துள்ளார் சமந்தா.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறும்போது, “ஆவேசம் திரைப்படம் நான் ரொம்பவே விரும்புகின்ற எல்லா விதமான பைத்தியக்காரத்தனத்தையும் கொண்டிருக்கிறது. விதிகளை எல்லாம் உடைத்து எறியும் விதமாக இது உருவாகி இருக்கிறது. காட்சிக்கு காட்சி மாறும் ஜானர்களை பார்த்து பயந்து சிரித்து பின்னர் மீண்டும் பயந்து சிரித்து இந்த படத்தை பார்த்தேன். சில படங்கள் தியேட்டரில் மட்டுமே பார்த்து ரசிக்கப்பட வேண்டியவை. அப்படிப்பட்ட ஒரு படம் தான் இது.
முக்கிய குறிப்பு : ஒருபோதும் பஹத் பாசில் படத்தை மிஸ் பண்ணாதீர்கள். பஹத் பாசில் ஸ்டீராய்டில் இருப்பவர் என எங்கோ படித்திருக்கிறேன். அதற்கு ஏற்றவாறு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். இந்த அற்புதமான படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் முழுமையாக உத்வேகம் கொடுக்கக் கூடியவர்கள்” என்று கூறியுள்ளார். இவர்கள் இருவரும் சூப்பர் டீலக்ஸ் என்கிற படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.