நவம்பர் 8ல் ஒரே ஒரு வெளியீடு… | ஏழை மக்களை கவுரவித்த மீனாட்சி சேஷாத்ரி, ராகுல் ராய், தீபக் திஜோரி | பாலியல் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை: மஞ்சு வாரியர் வழக்கு தள்ளுபடி | 10 ஆயிரம் தியேட்டர்களில் 'கங்குவா' ரிலீஸ்? | ஹர்பஜன் சிங் நடிக்கும் 'சேவியர்' படத்தில் நாயகியான ஓவியா | பாடம் கற்றுத் தந்த பிச்சைக்காரன் | தமிழில் அறிமுகமாகும் கேரள மாடல் | பிரபல போஜ்புரி பாடகி சாரதா சின்கா காலமானார் | தண்டேல் பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு | 'ராமாயணா' - 2026 தீபாவளி வெளியீடு |
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பவன் கல்யாண் இன்னொரு பக்கம் ஜனசேனா என்கிற அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். தற்போது 2024 பார்லிமென்ட் தேர்தல் ஆறுகட்டங்களாக நடைபெறும் நிலையில் ஆந்திராவிற்கான சட்டசபை தேர்தலும் மே 13 இல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள பீதாப்புரம் என்கிற சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார் பவன் கல்யாண்.
இதற்காக சமீபத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள பவன் கல்யாண் அப்போது தன்னிடம் 164.53 கோடி சொத்துக்கள் உள்ளதாக அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். இதில் 118.3 6 கோடி அசையா சொத்துக்களாகவும் 46.17 கோடி அசையும் சொத்துக்களாகவும் இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் 14 கோடி மதிப்பிலான 11 விலை உயர்ந்த கார்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.