லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்'படத்திற்கு பிறகு ராகவா லாரன்ஸ் தான் நடிக்கும் படங்கள் குறித்து அறிவித்து வருகிறார். 'துர்கா' என்ற படத்தில் நடிப்பதை சமீபத்தில் அறிவித்தார். அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் எழுதிய 'பென்ஸ்' என்ற கதையில் நடிக்க இருப்பதாக அறிவித்தார். இப்போது வெற்றிமாறன் கதையில் நடிக்க இருக்கிறார்.
வெற்றிமாறனை சந்தித்த படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டு ராகவா லாரன்ஸ் இதனை தெரிவித்திருக்கிறார். படத்தை பைப் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். இதுகுறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருக்கும் பதிவில் “வணக்கம் நண்பர்களே மற்றும் ரசிகர்களே, வெற்றிமாறன், அதிகாரத்தின் படப்பிடிப்பு ஸ்கிரிப்டைப் பற்றி கூறியதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். வெற்றிமாறன் எழுதிய ஒரு பிரமாண்டமான படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்.
நான் முன்பு அறிவித்த இரண்டு திட்டங்களுக்குப் பிறகு இந்த திட்டத்தில் வேலை செய்ய நான் காத்திருக்க முடியாது. இந்த அற்புதமான ஸ்கிரிப்டை எனக்கு வழங்கிய வெற்றி மாறனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், காத்திருப்புக்கு மதிப்பளித்தது, இதை உருவாக்கிய தயாரிப்பாளர் கதிரேசனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் அனைவரின் ஆசிகளும் எனக்கு வேண்டும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.