என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். மே மாதம் படம் வெளியாக வாய்ப்புள்ளது. இதையடுத்து சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே அறிவிப்புகள் வெளியானது. இதில் எஸ்.ஜே.சூர்யா,சுராஜ் வென்ஜாரா, துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிபு தமின்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கின்றார். இம்மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.
விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு இன்று விக்ரம் 62வது படத்திற்கு ' வீர தீர சூரன்' என்கிற தலைப்பைப் சிறப்பு வீடியோ உடன் அறிவித்துள்ளனர். அதில் மளிகை கடை நடத்தி வரும் விக்ரமை போட்டு தள்ள ஒரு கும்பல் காத்திருக்கிறது. கும்பல் கடையை நெருங்கி வரும் போது மளிகை கடையில் இருந்து துப்பாக்கி ஒன்றை எடுத்து அசம்பிள் செய்து கூட்டத்தில் ஒருவரை சுடுகிறார் விக்ரம். இதில் அவர்கள் பயந்து ஓடுவது மாதிரியான காட்சிகள் உள்ளன. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதோடு படத்தில் இருந்து ஒரு முதல்பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அதில் இரு கைகளில் அரிவாள் உடன் இருக்கிறார் விக்ரம். பின்னணியில் பல பேர் விழுந்து கிடக்கிறார்கள். உடலில் ரத்தம் படிந்து இருக்கிறது.
படத்தின் அறிமுக வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=0utMPC7YxDM