ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என பல படங்களில் நடித்தவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் கடந்த ஆண்டு சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். தற்போது அவர் வானத்தைப்போல என்ற சீரியலில் நடித்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டீவாக இருந்து வரும் சங்கீதா, தன்னுடைய போட்டோ மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலதரப்பட்ட கமெண்ட்டுகளை கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் அவரது புகைப்படத்தை பார்த்து ஒரு ரசிகர், உன்னுடைய அழகால் என்னை கைது செய்கிறாய் என்று கமெண்ட் கொடுத்ததற்கு, இது போன்று நிறைய கமெண்ட்களை போடுமாறு பதில் கொடுத்திருந்தார் சங்கீதா. ஆனால் அதையடுத்து ஒரு ரசிகரோ, உன்னை வச்சி செய்யனும் போல் உள்ளது என்று ஒரு கமெண்ட் கொடுத்திருந்தார். அதற்கு, இந்த ஜென்மத்துல கஷ்டம். அடுத்த ஜென்மத்துல கண்டிப்பா ட்ரை பண்ணலாம் என கோபப்படாமல் கூலாக ஒரு பதில் கொடுத்திருக்கிறார் சங்கீதா.