ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? | இன்று 7 படங்கள் ரிலீஸ் : முன்பதிவு நிலவரம் என்ன? | தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் தக் லைப். திரிஷா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், சித்தார்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருந்தார்கள். ஆனால் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று விட்டதால் தங்களது கால்ஷீட்டை வீணடித்து விட்டதாக சொல்லி தக்லைப் படத்திலிருந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் வெளியேறிய நிலையில் அவர்களுக்கு பதிலாக சிம்பு, அரவிந்த்சாமி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது சித்தார்த்தும் தக்லைப் படத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். இதனால் சித்தார்த் நடிக்க இருந்த கேரக்டருக்கும் வேறு நடிகரை பரிசீலணை செய்து வருகிறாராம் மணிரத்னம்.