டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ள விக்ரம் அடுத்தபடியாக சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கும் தனது 62 ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருடன் எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த நிலையில், தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகயுள்ளதாக சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டு இருக்கிறார் விக்ரம். அதோடு, அந்த பதிவில், ஓ போட மறந்து விடாதீர்கள் என்று குறிப்பிட்டு ஜெமினி பட போஸ் கொடுத்துள்ளார். இதன் காரணமாக 2002ம் ஆண்டு அவர் நடித்த ஜெமினி படம் மீண்டும் மறு வெளியீடு செய்யப்படலாம் என்றும், ஜெமினி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகலாம் என ரசிகர்கள் பல்வேறு விதமான யூகங்களை கருத்துக்களாக பதிவிட்டுள்ளனர். இதற்கான விடை இரு நாட்களில் தெரிந்துவிடும்.




