ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
திரைத்துறையிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆரிடம் சம்பளம் பெற்ற ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆருக்கே சம்பளம் கொடுக்கும் முதலாளியாகவும் மாறினார்.
'சத்யா மூவீஸ்' என எம்.ஜி.ஆரின் தாயாரின் பெயரிலேயே திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்தில் முக்கிய படங்களான ரிக்ஷாக்காரன், இதயக்கனி, உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.
எம்.ஜி.ஆர் நடிப்பதற்காக 'ராணுவ வீரன்' என்ற கதையை எழுதினார் ஆர்.எம்.வீரப்பன். அப்போது எம்ஜிஆர் அரசியலில் பிசியாகி விட்டதால் அந்த கதையில் அவர் நடிக்கவில்லை. எம்.ஜி.ஆர் அளவிற்கு அப்போது சினிமாவில் வளர்ந்து வந்தவர் ரஜினி. எனவே அந்த கதையில் ரஜினியை நடிக்க வைத்து 'ராணுவ வீரன்' என்ற பெயரிலேயே அந்த படத்தை தயாரித்தார்.
எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் ரஜினி ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். சிரஞ்சிவி வில்லனாக நடித்திருந்தார். 1981ம் ஆண்டு படம் வெளியானது. பின்னாளில் மாப்பிள்ளை, பாட்ஷா உள்ளிட்ட சில ரஜினி படங்களை சத்யா மூவீஸ் தயாரித்தது. எம்.ஜி.ஆரை போன்றே ரஜினிக்கும் நெருக்கமானவராக இருந்தார் ஆர்.எம்.வீரப்பன்.