இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஜெயலலிதா காலத்தில் அதிமுகவிற்கு பல நடிகர் நடிகைகள் பிரச்சாரம் செய்து வந்தார்கள். அதன் பிறகு பாஜகவிலும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என பலரும் இணைந்து கொண்டார்கள். அதோடு பாஜகவில் இணைந்திருந்த கவுதமி, காயத்ரி ரகுராம் போன்றவர்கள் சமீபத்தில் அங்கிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தார்கள். அதேசமயம் கடந்த காலங்களில் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்து வந்த நடிகர் செந்தில் இந்த முறை பாஜகவுக்கு பிரச்சாரம் செய்து வருகிறார்.
இப்படி பல நடிகர்களும் பல கட்சிகளில் இடம்பெற்று பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், சமீபத்தில் நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தபோது நடிகை ராதிகாவும் அந்த கட்சியில் இணைந்து தற்போது விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் காமெடி நடிகை ஆர்த்தியும் பாஜகவில் இணைந்திருக்கிறார். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்த இவர் அவரது இறப்புக்கு பிறகு அந்த கட்சியில் இருந்து வெளியேறி விட்டார். இந்த நிலையில் நேற்று அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.