இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான பவன் கல்யாணின் முதல் மனைவி நடிகை ரேணு தேசாய். பவன் கல்யாண் ஜோடியாக 'பத்ரி, ஜானி' படங்களில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் பிறந்தனர். இருப்பினும் மூன்றே ஆண்டுகளில் 2012ல் விவாகரத்து செய்து கொண்டனர்.
2000ம் ஆண்டில் பிரபுதேவா, பார்த்திபன் நடித்து வெளிவந்த 'ஜேம்ஸ் பாண்டு' படத்தில் பிரபுதேவா ஜோடியாக ரேணு தேசாய் நடித்திருந்தார். அவர் நடித்த ஒரே தமிழ்ப்படம் இதுதான்.
கணவர் பவன் கல்யாணைப் பிரிந்தாலும் அவரைப் பற்றி விமர்சிக்க மாட்டார். நேற்று கணவர் வெற்றி பெற்றதும் அவருடைய மகன் அகிரா நந்தன் பதிவிட்டிருந்ததை மறுபதிவு செய்திருந்தார். அது மட்டுமல்லாது, “எப்போதும் பாஜக பெண் தான்” என்று முன்னாள் பிரதமர் ராஜீவ்வையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு ஒரு பதிவையும் போட்டுள்ளார்.
பவன் கல்யாணின் நேற்றைய வெற்றிக் கொண்டாட்டங்களில் அகிரா நந்தன் கலந்து கொண்டார். சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்பின் போதும் மகன் அகிராவை அழைத்துச் சென்று அவரது காலில் விழச் சொல்லி ஆசீர்வாதம் வாங்க வைத்தார்.