அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
நிகேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார், மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் மார்ச் 22ம் தேதி வெளியான படம் 'ரெபல்'. இப்படத்திற்கு சிறப்பான விமர்சனங்களோ, வரவேற்போ கிடைக்கவில்லை. அதனால் படம் எதிர்பார்த்ததை விடவும் மோசமான வசூலையே பெற முடிந்தது. இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இப்படத்தை இன்று முதல் ஓடிடியில் வெளியிட்டுள்ளார்கள்.
பொதுவாக ஒரு தமிழ்ப் படம் தியேட்டர்களில் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதை தமிழ்த் திரையுலகத்தில் பாலோ செய்து வருகிறார்கள். அப்படியிருக்க, இந்தப் படத்தை இரண்டே வாரங்களில் ஓடிடியில் வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
புதிய படங்கள் வெளியானால் எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் தர வேண்டும் என ஒரு கோரிக்கை உள்ளது. அது குறித்து திரையுலக சங்கங்கள் விரைவில் பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார்கள். 'ரெபல்' இப்படி இரண்டு வாரங்களில் வெளியானதை வைத்து மேலும் சில படங்கள் இப்படி வெளியாக வாய்ப்புகள் உள்ளது.