ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'ரெபல்'. மமிதா பச்சு, ஆதித்யா பாஸ்கர், கருணாஸ், சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூணார் பகுதியில் உள்ள கல்லூரியில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படம் வருகின்ற மார்ச் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இந்த நிலையில் மீண்டும் ரெபல் படக் கூட்டணி இணைவதாக கூறப்படுகிறது. அதன்படி, நிகேஷ் இயக்கத்தில் மீண்டும் ஜி.வி. பிரகாஷ், மமிதா பச்சு முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இதனை ஜி.வி. பிரகாஷின் பெர்லல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறுகின்றனர்.